ஜாமீனில் வந்த ரவுடி பினு தலைமறைவு

சென்னை

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்துள்ள ரவுடி பினு தலைமறைவு ஆகி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி பூந்தமல்லி அருகே ஒரு ரவுடி கும்பல் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றை நடத்தியது.   அந்த கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 75 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.   அப்போது அவர்களின் தலைவர் பினு தப்பி ஓடி விட்டார்.  அவரையும் அவர் கூட்டாளிகளையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

ரவுடி பினு அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.  அவரை கைது செய்து காவல்துறையினர் வேலூர் சிறையில் அடைத்தனர்.    அதன் பிறகு ரவுடி பினு நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளி வந்தார்.   கடந்த 23 ஆம் தேதி வெளி வந்த பினு மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை அவர் கையெழுத்திட மாங்காடு  காவல்நிலையம் வரவில்லை என காவல்துறையினரால் தெரிவிக்கபட்டுள்ளது.   அத்துடன் அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பது காவல்துறையினருக்கு தெரியவில்லை எனவும் அவர் தலைமறவாகி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.