ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! டிஜிபி திரிபாதி

சென்னை: அயனாவரம் கஞ்சா ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த 21ம் தேதி அதிகாலை சென்னையின் பிரபல கஞ்சா வியாபாரியும்,  ரவுடியுமான சங்கரை (48) அயனாவரம்  போலீசார் எண்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.  இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது.  சங்கரின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த கூடாது. அதேநேரம் காவல் துறையில் உள்ள மற்றொரு பிரிவின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை மாநகர காவல் துறையில் இருந்து நேற்று சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்

இதையடுத்து, சங்கரின்  சகோதரி ரேணுகா கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று சங்கரின்  சடலத்தை பெற்று நேற்று மாலை ஓட்டேரி மயானத்தில் சங்கரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.