ரவுடி வரிச்சூர் செல்வத்தை அழைத்து வந்தது திமுகவினர்! ஆட்சியர் பரபரப்பு தகவல்

காஞ்சிபுரம்:

3 என்கவுண்டர்களில் இருந்து தப்பித்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி.க்கான வழியில் அழைத்து வந்தது திமுகவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர்கள் டோனர் பாஸ் இல்லாமல்  வந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்திவரதரை முக்கிய நபர்கள் தரிசிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்திட்ட ‘டோனர் பாஸ்’ வழங்கப்பட்டு வரும்  நிலையில், பிரபல ரவிடியான வரிச்சூர் செல்வம் விவிஐபி பாஸ் வழியாக வந்து, அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருக்கு  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு இந்து அறநிலை துறை சார்பாக எவ்வாறு மரியாதை வழங்கப்பட்டதோ அதே அளவிலான மரியா வழங்கப்பட்டது. அவருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில்,  மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் கடும் பாடுபட்டு அத்திவரதரைக் கண்டு வரும் நிலை யில், ரவுடி ஒருவர் தனது சகாக்களுடன் சகல மரியாதையாக விஐபி தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்பத குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வரிச்சியூர் செல்வம் விஐபி தரிசனம் செய்வது போன்ற வீடியோக்கள் தனது ன் கவனத்திற்கும் வந்ததாக கூறினார்.  இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டன. அப்போது, வரிச்சூர் செல்வத்தை  திமுக பிரமுகர்கள் அழைத்து வருவது தெரிய வந்துள்ளது. அவர்கள்,  உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் விவிஐபி நுழைவு வாசல் வழியாக  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் ரவுடியை அழைத்து வந்த செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் விவிஐபி பாஸ் வாங்க கடும் கெடுபிடிகள் உள்ள நிலையில், ரவுடி ஒருவரை திமுக பிரமுகர்கள் எந்தவித அனுமதி சீட்டும் இன்றி அழைத்து வந்துள்ளனர்.

அனுமதிச் சீட்டு இல்லாத நிலையில், அவர்களை காவல்துறையினர் எப்படி விவிஐபிக்கான வழியில், அனுமதித்தார்கள்? இதுபோன்று முறைகேடாக பலர் அனுமதிக்கப்படுகிறார்களா, என்று பொதுமக்களும், பக்தர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.