சென்னையில் போலீஸை தாக்கிய ரவுடி சுட்டுக் கொலை
சென்னை :
சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றியவர் ராஜவேல். இவர் நேற்று(2ம் தேதி) ரவுடிகளின் தாக்குதலுக்கு ஆளானார்.
ராஜவேலை தாக்கிய ரவுடிகள் தப்பி ஓடினர். எனினும் போலீசார் தேடுதல் வேலையை முடுக்கிவிட்டனர். அப்போது ராஜவேலை தாக்கிய ரவுடி அரவிந்தனை போலீசார் சுற்றி வளைத்தனர்.
தப்பியோட முயன்ற அவனை போலீசார் சுட்டனர். இதில் அவன் சுருண்டு விழுந்து இறந்தான். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.