200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல்: பிரபுதேவாவுக்கு தனுஷ் நன்றி

‘மாரி 2′ படத்தில் தனுஷ் பாடிய  ‘ரவுடி பேபி’ பாடல் யு-டியூப் வீடியோ வளைதளத்தில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதற்காக நடிகர் தனுஷ் நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவாவுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில்  “ரவுடி பேபி, 20 கோடி பார்வைகடிள கடந்த சாதனை படைத்துள்ளது. இதற்காக  பிரபுதேவா சார், ஜானி மாஸ்டர், யுவன் ஷங்கர் ராஜா சார், இயக்குநர் பாலாஜி மற்றும் அவரது குழு, காந்தக் குரல் உடைய தீ, சாய் பல்லவி அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்து  தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’.  இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைஅமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள  ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த பாடல் வீடியோ சமூக வலைதளமான யு டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  தற்போது இந்த பாடல் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வெளியான ஒய் திஸ் கொலவெறி பாடலை முந்தி, ரவுடி பேபி பாடல் 20 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே  ‘ஃபிடா’ என்ற படத்தின் ‘வச்சிந்தே’ வீடியோ பாடல் 183 மில்லியன் பார்வையாளர் களைக் கொண்டு முதலிடத்தில் இருந்தது. தற்போது அதையும் கடந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது ‘ரவுடி பேபி’ பாடல்.

இதன் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் 200 மில்லியன் பார்வைகளைக் கொண்ட யூ டியூப் வீடியோ என்ற பெயரையும் பெற்றுள்ளது ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோ..

கார்ட்டூன் கேலரி