இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கெலை

ங்கிலாந்தில் இளவரசர் ஹாரி திருமணம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த, இளவசரசர் சார்லஸ் – டயானா  தம்பதியினரின் இரண்டாவது மகனான ஹாரியின் திருமணம் இன்று மாலை கோலாகலமாக நடைபெற உள்ளது. ஹாரி தனது தோழியான,  அமெரிக்க நடிகை மேகன் மார்க்கெலை  திருமணம் செய்ய உள்ளார்.

இந்த கோலாகல திருமணம் இங்கிலாந்தில் உள்ள பெர்க்சையரில் அமைந்துள்ள பிரமாண்டமான  வின்சர் மாளிகையில் நடைபெற  உள்ளது. ஹாரியின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவிக்க  உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கிலாந்து வந்து குவிந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் பொதுமக்களும் தங்களது குடும்ப உறுப்பினர் திருமணம் போன்று மகிழ்ச்சியுடன் கொண் டாடி வருகின்றனர்.  ஹாரி, மேகனின் உருவத்தை வரைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், மணப்பெண் மேகனின் தந்தை தாமஸ் மார்கில் இதய அறுவை செய்திருப்பதால் அவர் திருமணத்தில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் நடைபெற உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம்

திருமணச் சேவையானது செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இன்னும்  12 மணி நேரத்தில் தொடங்கும். வின்ட்சர் டீன் சேவையை நடத்தும் என்றும், மணமக்கள் இருவரும் தேவாலயத்தில் ஒப்புதல் கொடுத்ததும் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவருடைய இடத்தில், ஹாரியின் தந்தையா,, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மணமகளை, மணமகனிடம் ஒப்படைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்ததும் இருவரும் கேஸில் ஹில், ஹை வீதி, ஷீட் வீதி, கிங்ஸ் சாலை, ஆல்பர்ட் சாலை வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதையடுத்து மணமக்களை பார்க்கவும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் கடந்த இருதினங்களுக்கு முன்பிருந்தே பொதுமக்கள் பொதுவெளியில் இரவு பகலாக தங்கி உள்ளனர். முன்னதாக நேற்று அரண்மனையை விட்டு வெளியே வந்த ஹாரி திடீரென பாதுகாப்பு வளையத்தையும் மீறி பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

அரச குடும்பத்தினர் வசிக்கும் அரண்மனை வளாகம்

இந்நிலையில் திருமணத்திற்கு முந்தைய ஏற்பாடுகளைக் கவனிக்க மணப்பெண் மேகன் மற்றும் அவரது தாயார் டோரியா ரெக்லான்ட் ஆகியோர் இங்கிலாந்து வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மாலை நடைபெற உள்ள  இந்த கோலாகலமான அரச குடும்ப திருமண விழாவை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஆயத்தமாகி வருகின்றன.