மீண்டும் முதலிடத்தில் ராயபுரம்: சென்னையில் 11/05/2020 கொரோனா நோய் தொற்று நிலவரம்….

சென்னை :

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி இன்று (11-5-2020) வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பில்  ராயபுரம் பகுதி மீண்டும் முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து கோயம்பாக்கம் உள்ளது. இந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தலா 600ஐ தாண்டியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் கொரோனா கிளஸ்டராக மாறியதைத் தொடர்ந்து,  சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருகிறது.

நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது.   தற்போது நோய் உள்ளவர்கள் 3050 என்றும், குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 743 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கையும்  28 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில்  62.34% ஆண்கள், 37.63% பெண்கள் ஆவர்.

ராயபுரம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 676 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராயபுரம் பகுதி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

ராயபுரம் – 676 ,
கோடம்பாக்கம் – 630,
திரு.வி.க நகரில் – 556,
தேனாம்பேட்டை – 412,
வளசரவாக்கம்- 319,
அண்ணா நகர் – 301,
தண்டையார் பேட்டை – 274,
அம்பத்தூர் – 204,
அடையாறு – 175,
திருவொற்றியூர் – 84,
மாதவரம் – 54,
பெருங்குடி – 36,
சோளிங்கநல்லூர் – 28,
ஆலந்தூர் – 29,
மணலி – 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.