பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கில் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , நடிகை ஆலியா பட் , பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லோகோ உடன் கூடிய மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.