RRR ஷூட்டிங் தற்காலிக நிறுத்தம் – படக்குழு அறிவிப்பு

--

பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் இரு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , நடிகை ஆலியா பட் , பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் உட்பட பலர் நடிக்கவுள்ளனர்

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் புனேவில் தொடங்கவிருந்த நிலையில், ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் ராம் சரணின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது

இதனால், ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 3 வாரங்களுக்கு பின் மீண்டும் ஷூட்டிங் பணிகள் தொடங்கும் எனவும் படக்குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.