ஊரடங்கை மீறிய வாகனங்கள் மூலம் தமிழகத்தில் ரூ.1.36 கோடி அபராதம் வசூல்

சென்னை:

மிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில், செல்வோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் இன்றுவரை ரூ.1.36 கோடி வசூலாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் ஏராளமானோர் ஊரடங்கை மீறி பலர் வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி வாகனங்களை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.

அதன்படு இன்றுவரை ஊரடங் கமீறி வெளியே சுற்றிய 3,60,566 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.1.36 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது

இதுவரை  2,45,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.