சென்னை,

15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட விருதகிரீஸ்வரர் கோயில் சிலை மீட்பு ஆஸ்திரேலியா வில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இருந்து  15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூ. 1.49 கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்த கற்சிலையை சிலை தடுப்பு பிரிவு போலீஸ் மீட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட சிலை விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயிலைச் சேர்ந்ததாகும்.

விருத்தாசலத்தை அடுத்த விருதகிரீஸ்வரர் கோவில் கடந்த 2002ம் ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு நரசிம்மி கற்சிலை திருடுப் போனது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் நரசிம்மி சிலைக்குப் பதிலாக கடத்தல்காரர்கள் வேறு சிலையை வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரலியாவுக்கு கடத்தப்பட்ட அந்த சிலை தற்போது மீட்க்கப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். 15 ஆண்டுக்கு முன் கடத்தப்பட்ட பழங்கால நரசிம்மி சிலை 1046 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட அந்த சிலை மீண்டும் விருதகிரீஸ்வரர் கோயிலுக்கே வழங்கப்படும் என சிலை தடுப்பு பிடிரிவு காவல்துறையின்ர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள கோயில் சிலைகள் அனைத்தையும் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.