சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மீறி செயல்பட்ட வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.1.83 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச்செயலா் ஹா்மந்தா் சிங் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வந்தாலும், மற்றொருபுறம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள் விதிமுறைகளின்படி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வங்கிகள், கடைகள் மற்றும் சந்தைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக் கவசம் அணியாத நபா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பொதுமக்கள் உள்ள இடங்களில் வியாபாரம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீதும் அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபா்கள் மற்றும் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதன்கிழமை (ஆக. 26) வரை ரூ.1 கோடி 83 லட்சத்து 44,067 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளதாக  நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங் தெரிவித்தாா்.