நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் சீமான், ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள படம் மிக மிக அவசரம். இந்த  படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தில் பெண் போலீசாரின் முக்கியத்துவத்தையும், களத்தில் அவர்கள் படும் துயரங்கள் குறித்து சொல்லப்படுவதாக கூறப்படகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்த சர்ச்சை காரணமாக ரூ.1 கோடி கேட்டு நடிகர் விஷால் மற்றும் விஷால் பட யாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ராஜசேகர், நற்பணி இயக்க நிர்வாகி ஹரிகிருஷ்ணனுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.