தொகுதி ஒதுக்கீடில் இருந்து தலா ரூ.1 கோடி கொரோனா நிதி: பாஜக எம்.பி.க்களுக்கு உத்தரவு

டெல்லி

பாஜக எம்.பி,க்கள் அனைவரும் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தலா 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என  ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில்,  பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  பாஜக எம்.பி,க்கள் அனைவரும் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கரோனா தடுப்புக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள நிதிக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிடடுள்ளார்