ரூ.1 கோடி இழப்பீடு; பாதுகாப்பற்ற துறையாக சினிமா துறை உள்ளது! கமல்ஹாசன் வேதனை

சென்னை:

ந்தியன்-2 படப்பிடிப்பின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்த கமல், பாதுகாப்பற்ற துறையாக சினிமா துறை உள்ளது என்றும் தான்  நூலிழையில் உயிர் தப்பியதாகவும்  தெரிவித்தார்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டுடியோ ஒன்றில்  இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சுமார் 150 உயரத்தில் கிரேனில் இருந்து படத்தை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக  கிரேன் சாய்ந்த விழுந்து விபத்துக்குள்ளாது. இதில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ள னர்,10 பேர் படுகாயம் அடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில்   காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன்,  இறந்தவர்களின் உடலுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்,  விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்றும், இது முதலுதவிதான் பரிகாரம் இல்லை. எதைக் கொண்டு உயிரிழப்பை ஈடுகட்ட முடியாது. கூறினார். மேலும்,  கிரேன் விபத்தில் இருந்து தான் நூலிழையில் உயிர்தப்பியதாகவும்,  தெரிவித்தார்.

‘’லைகா நிறுவனத்தில் விபத்து நடைபெற்றதற்காக, ஒரு ராஜ்கமல் நிறுவனம் சார்பாகவோ பாதிக்கப்பட்டர் களைப் பார்க்க வரவில்லை. இது என் குடும்பத்தில் நடைபெற்ற விபத்து. இந்தத் தொழிலில் இருக்க வேண்டிய பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் விபத்து நடந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் சினிமா துறை எடுக்க வேண்டிய விஷயம்.

100, 200 கோடி ரூபாய் வசூல் என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பை அளிக்க முடியாத துறையாக சினிமா துறை இருப்பது அவமானகரமான ஒன்று. இனி நடக்கப்போகும் படப்பிடிப்புகளில் கடைநிலை ஊழியனுக்குக் கூட பாதுகாப்பு இருக்க வேண்டும். காப்பீடு இருக்க வேண்டும். அதற்கு முழுதுறை பங்கேற்க வேண்டும்.

இதனை வேண்டுகோளாக வைக்கவில்லை. இது நம்முடைய கடமை. அதனை நான் நினைவு கூர்கிறேன். விபத்துக்கு ஏழை பணக்காரன் என்று தெரியாது. அது சுனாமி போன்றது. மயிரிழையில்தான் நானும் இயக்குநரும் உயிர் தப்பியுள்ளேன். எனக்கு பக்கத்தில்தான் விபத்து நடந்தது’ என்று தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையில்,  உரிய இன்சூரன்ஸ் செய்யாமல், இது போன்ற ஆபத்தான தொழில் இடத்தில் சினிமா தயாரிப்பு நிறுவனமும் பணியாளர்களை நிறுத்தியுள்ளனர்.

மேலும், கிரேன் ஆபுரேட்டர் ராஜன் சொன்னதை கேட்காமல் கேமிரா குழுவினர் அதிக எடையை ஏற்றியதே விபத்துக்கு காரணம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது…