ரூ.1 கோடி: பாண்டிச்சேரி போத்தீஸ் துணிகடையில் வருமானவரித்துறை ரெய்டு!

புதுச்சேரி,

பிரபல துணிக்கடையான போத்தீஸ் பாண்டிச்சேரி கிளையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

போத்தீஸ் துணிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.1 கோடி வைக்கப்பட்டுள்ள பை
ரூ.1 கோடி வைக்கப்பட்டுள்ள பை

சென்னையில் இருந்து, பாண்டிச்சேரிக்கு அரசு பேருந்தில்  ரூ.1 கோடி பணம் போத்தீஸ் ஊழியர்களால் கொண்டு செல்லப்பட்டது.

பேருந்தில் நடைபெற்ற சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு பேருந்தில் ரூ.1 கோடி எடுத்து சென்ற போத்தீஸ் ஊழியர்கள் மூன்று பேரை கிளியனூரில் வருமான வரித்துறையினர் கைது செய்தனர்.

அதையடுத்து பாண்டிச்சேரி போத்தீஸ் கிளையில்  சோதனை நடைபெற்று வருகிறது.

பாண்டிச்சேரி அண்ணா சாலையில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையில் ஊழியர்களை வெளியேற்றிவிட்டு வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்துகின்றனர்.

தீபாவளி சமத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்திருந்த நேரத்தில் இந்த அதிரடி ரெய்டு நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த சோதனையை தொடர்ந்து அதன் அனைத்து கிளைகளிளும் சோதனை நடத்தப்படலாம் என தெரிகிறது

 

கார்ட்டூன் கேலரி