புயலில் சிக்கி இறந்த மீனவ குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!! முதல்வர் அறிவிப்பு

சென்னை:

ஒகி புயலில் சிக்கிய பலியான மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 2,500 உதவித்தொகை, காணமல் போன மீனவர்கள் குடும்பங்களுக்க ரூ 5,000 உதவித்தொகை வழங்கப்படும்.

குஜராத்தில் உள்ள மீனவர்கள் கரை திரும்ப ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கப்படும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் வழங்கப்படும். ஊனமுற்ற மீனவர்களுக்கு மாற்று தொழில் செய்ய ரூ 5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு ரூ 50 ஆயிரம் வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.