விரைவில்… 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள்: மத்தியஅமைச்சர் தகவல்

 

டில்லி,

நாட்டில் பணமதிப்பிழப்பு அறிவித்த பிறகு மத்தியஅரசு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக் களை அச்சடித்தது. அதையடுத்து 10 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்களும் பாதுகாப்பு வசதிகளுடன் புதியதாக அச்சடிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் புதிய 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது,

10  ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும்,  இதற்கு தேவைப்படும் மூலப்பொருட்க ளையும் கொள்முதல் செய்ய அனுமதி கொடுத்துள்ளதாகவும், புதிய அச்சிடப்பட்டதும், முதற்கட்டமாக கொச்சி, மைசூர் உள்ளிட்ட 5 நகரங்களில் புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.