டில்லி:

மிழகத்தில் உள்ள நீர்வழித்தடங்களில்  மாறு ஏற்படுவதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம்  ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளதை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையிலுள்ள நீர்நிலைகளான ஆறுகளை பாதுகாக்கத் தவறிய தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி மாதம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

சமூக ஆர்வலர்  ஓருவர் அடையாறு போன்ற ஆறு, கால்வாய்களில் உள்ள மாசு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு (2018) வழங்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழகஅரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ரூ.100 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறியது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணைகளை தொடர்ந்து, இன்று தீர்ப்பு கூறயது. அப்போது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.