சென்னை கூவம் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி 110ன் கீழ் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள அடையாறு, கூவம் கால்வாய் பகுதிகளில்  வெள்ள தணிப்புப் பணிகளை மேற்கொள்ள நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினர்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் விளைவுகளை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர், . அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகைகளில், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் நீரில் மூழ்குகின்ற நிலைமை அவ்வப்போது ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் அப்பகுதிகளில் வெள்ள தணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நடப்பாண்டில் மாநில நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை 4 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தல் உள்பட மற்ற பணிகள்  மேற்கொள்ளப்படும்.

சென்னை, கொல்கத்தா, திருச்சி, தஞ்சையில்  செயல்பட்டு வரும்  பூம்புகார் விற்பனை நிலையங்கள், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பொலிவு பெற அழகுபடுத்தப்படும், பூம்புகார் நிறுவனம் சார்பில்  நடப்பாண்டு  முதல், உலக அளவிலான கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may have missed