Random image

காஷ்மீரில் ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்…3 பேர் கைது

ஸ்ரீநகர்:

காஷ்மீர் கத்துவா மாவட்டம் பாலி மோர்ஹ் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 22.145 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதை பொருளையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

பஞ்சாப் ஹன்ட்வாரா நகரில் இருந்து ஹெராயின் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். ஹெராயினை வாங்குவதற்காக காஷ்மீரில் காத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.