சென்னை:
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு அறிவித்து ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியது.
அடையாறு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கிவைத்து நிவாரணத் தொகையை வழங்கினார். அதைத்தொடர்ந்து, இன்று முதல் வீடு வீடாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள  59,679மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி ஏற்கனவே அறிவித்தார். அதன்படி, வெளி மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் குடியேறியவர்கள் மற்றும் கரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் தங்கியுள்ள நீல நிறதேசிய அடையாள அட்டை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இன்று முதல் சென்னையில், மாநகராட்சிவருவாய் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.