கொல்கொத்தா:
ம்பான் புயலால்  கடுமையான சேதங்களுக்கு உள்ளாகிய மேற்கு வங்க மாநிலத்துக்கு  ரூ.100 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என சேதங்களை பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்று, கடந்த  20 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் கரையை கடந்தது.

அப்போது  இடி, மின்னல் கனத்த மழையுடன், மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் சுமார் 4 மணி நேரம் மேற்குவங்க மாநிலத்தை சூறையாடிவிட்டு கரையை கடந்தது. இதனால் மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து, பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் புயலுக்கு 72 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வேண்டுகோளை ஏற்று,  புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை காண பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் வந்தார். அவரை   முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதிப்புகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதி வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.50,000 நிதி வழங்குவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மோடி, ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மத்திய, மாநில அரசு துணைநிற்கும் எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, ஒடிஷா மாநிலத்திலும் புயல் பாதிப்புகளை பார்வையிட மோடி புறப்பட்டுச் சென்றார்.