பஸ் சீட்டில் உட்கார ஆயிரம்..  கூரையில் பயணிக்க ரூ.ஐநூறு..

டில்லி

டில்லியில் பேருந்தில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது.


தலைநகர் டெல்லியில், பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் கூலி வேலை பார்த்துப் பிழைப்பு நடத்தி வந்தனர்.

கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் கால்நடையாகவே செல்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தோர்.

நூறு கி.மீ, 200 கி.மீ. தூரங்களைக் கால்நடையாகவே கடப்பதால் வழி எங்கும் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று பீதி ஏற்பட்டுள்ளது.

இதைத் தவிர்க்க, தனியார் பேருந்து உரிமையாளர்கள் டெல்லியில் இருந்து உ.பி.க்கு பேருந்துகளை இயக்குமாறு அந்த மாநில அரசு  வேண்டுகோள் விடுத்தது.

இதை ஏற்று டெல்லியில் இருந்து ஏராளமான தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால், கட்டணம் ‘டபுள்’.

கான்பூருக்கு ஐநூறு ரூபாய் தான் கட்டணம். இப்போது ஆயிரம் ரூபாய்.

இதேபோல் தான் எல்லா ஊர்களுக்கும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பணம் குறைவாக இருந்தால் -( அதாவது பாதி) அந்த பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்களைக் கூரையில் பயணம் செய்ய அனுமதிக்கிறார்கள், நடத்துநர்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்