சென்னை:

மிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சட்டசபையில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டம்  இன்று தொடங்கியது.  ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதில், பொங்கல் பரிசாக தமிழகத்தில் ரேசன் கார்டுகள் வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த பரிசுத் தொகையானது  திருவாரூர்  மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால், அங்கு மட்டும் கிடையாது என்றும்   குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும்,  ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்பாயத்தின் உத்தரவை எதிர்த்து அரசு மேல்மூறையீடு செய்யும் என்றும்,  தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்சார வாகனங்களைத் தயாரிக்க சலுகைகள் வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், அதற்காக புதிய தொழில் கொள்கைகள் உருவாக்கப்படும்  என்றும், பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு புதிய தொழிற்கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் உரையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.