மதுரை மாவட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்.. எடப்பாடி அறிவிப்பு

சென்னை:
கொரோனா பரவரை தடுக்கும் நோக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள  மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர்  பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலாசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாலை 5 மணி அளவில் மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.  பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நள்ளிரவு முதல் முழு  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில்,  குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.