டில்லி

மின் வாகனங்களுக்கு உள் கட்டமைப்பு பணிகளுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.10000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் மின் வாகனங்களுக்கு பல நாடுகள் மாறி வருகின்றன. இந்தியாவிலும் அந்த மாறுதல் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசு மின் வாகன உற்பத்திக்கு பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கு அவ்வப்போது சார்ஜ் செய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான வசதி இப்போது கிடையாது.

அதை ஒட்டி நிதி அயோக் ஏற்கனவே இந்த மின் வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் உள்ளிட்ட உள் கட்டமைப்புகள் அமைக்க நிதி உதவி அளிக்க நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. தற்போது இந்தியா மாசு ஏற்படுவதால் கடும் பாதிப்பில் உள்ளதால் மின் வாகனங்கள் பயன்பாடு மிகவும் அவசியம் என நிதி அயோக் தெரிவித்துள்ளது.

இன்று தாக்கல் செய்யபட்ட நிதிநிலை அறிக்கையில் மின் வாகன பிரிவுக்கு ரூ.10000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஒதுக்கிட்டின் மூலம் மின் வாகனங்களுக்க்கு தேவையான சார்ஜிங் உள்ளிட்ட பல உள் கட்டமைப்புக்கள் அமைகக் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.