உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி!: மத்திய அரசு அறிவிப்பு

டில்லி:

ள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.10,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு குறித்த விவாதத்தின்போது பேசிய மத்திய இணை அமைச்சர் உள்நாட்டு பாதுகாப்புக்காக10,132 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், நாடு முழுவதும் போலீஸ் படைகளை நவீனப்படுத்தும் நோக்கில் 2017 முதல் 2020 வரை 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது என்றும்,இந்த தொகையானது நாடு முழுவதும் உள்ள போலீஸ் படைகளுக்கு நவீன ஆயுதம் வாங்குதல், வாகனங்கள் வாங்குதல், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு மேம்பாடு போன்ற திட்டங்களுக்கான  செலவிடப்படும் என்று கூறினார்.

மேலும், ஜம்மு – காஷ்மீர் மற்றும்  நக்சல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக   ரூ.10,132 கோடி ஒதுக்கப்பட இருப்பதாகவும், இதில் ரூ. 3,000 கோடி நக்சல்களால்  பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அளிக்கப்படும் என்றும், வடகிழக்கு காவல்துறை மேம்பாட்டுக்கு ரூ.1,215 கோடி ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.