மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் வேண்டுகோள்

சென்னை: மழையால் பாதிப்புக்குள்ளான கடலூர், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் மாநிலஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில், மார்கழி மாதத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வந்த மழையால், அருவடைக்கு தயாரான நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.  குறிப்பாக கடலூர், மயிலாடு துறை  மாவட்டங்களில், மழை காரணமாக  பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அவறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும், உளுந்து செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகின.  இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

கடன்வாங்கி விவசாயங்களை செய்து வரும் நிலையில், கனமழை தங்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம், “, நிவர் மற்றும் புரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளே இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழை மேலும் சேதங்களை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் வாழப்பாடி இராம.சுகந்தன் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கடலூர் , மயிலாடுதுறை, மற்றும் பல பகுதிகளில் நெல் விவசாயிகள் மழையால் பெரும்பாதிப்பு அடைந்துள்ளனர் . பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் !  என வலியுறுத்தி உள்ளார்.