ரூ.1,12,681 கோடி மதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயம் ஐ.ஏ.எஸ். அரசியலுக்கு வருகிறாரா? விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்…

சென்னை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ரூ. 1,12,681 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய மதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய  சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஓய்வுபெற இன்னும் 3 வருடங்கள் உள்ள நிலையில், தமிழக அரசு பணியில் இருந்து  விஆர்எஸ்  கேட்டுள்ளதாக வெளியாகி உள்ள  தகவல் தமிழக மக்களிடையே பரபரப்பை உருவாக்கி வருகிறது. அவர் அரசியலில் கால்பதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சகாயம் ஐஏஎஸ்  தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 6 வருடமாக பதவி வகித்து வருகிறார். அவரது திறமைக்கு ஏற்ப பதவிகளை வழங்காமல் தமிழக அரசு உதாசினப்படுத்தி வருகிறது. இந்த  நிலையில் சகாயம், விஆர்எஸ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார்.

தற்போது 57 வயதாகும் சகாயம், 60வயது வரை பணியாற்ற முடியும். ஆனால்,  3 ஆண்டுகளுக்கு முன்பே, அவர் விஆர்எஸ்க்கு விண்ணப்பித்துள்ளார். அவரது கோரிக்கையை தமிழகஅரசு ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்னும் மாதங்களி  சகாயம்  அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

சகாயம் ஐ.ஏ.எஸ். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் சகாயம் ஐ.ஏ.எஸ். ரூ.16ஆயிரம் கோடி மதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்தியவர்.  மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. 3 மாத விசாரணைக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதுபோலமணல் குவாரிகளைப் போன்று கிராணைட் குவாரிகளையும்  அரசே ஏற்று நடத்த வேண்டும் குரல்கொடுத்தார்.  விவசாயிகள் அரசின் முதுகெலும்பு என்றும், அவர்களின் பிரச்னையை தீர்ப்பதற்கு,அரசு நடவடிக்கை எடுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், அரசு ஏரி, குளம் மற்றும் கண்மாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சகாயம்  தெரிவித்தார்.

மதுரை  கிரானைட் ஊழில் சிக்கிய பெருந்தலைகள், அதிமுக, திமுக ஆகி இரு கட்சிகளுக்கும் நெருக்கமானவர்கள் என்றும், இரு கட்சிகளும், அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் முறைகேடாக பணம் பெற்றதாகவும், இதன் காரணமாக, ஊழல்வாதிகள் மீது தீவிர நடவடிக்கை எடுப்பதில் இரு கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் சகாயம் ஐஏஎஸ் அரசியலுக்குள் நுழைய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்; சகாயம் என்ற வார்த்தையை வேதவாக்க நினைத்து பணியாற்றி வந்த சகாயம்,  ஏற்கனவே  மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வருகிறார். அவரை அரசியலுக்கு வர அவரது ஆதரவாளர்கள்  அழைப்பு விடுத்து வருகின்றனர்.  தமிழகத்திலும் அடுத்த ஆண்டு (2021) மார்ச், ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சகாயம் விஆர்எஸ் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.

சாகயம் ஏற்கனவே, தனது தலைமையின்கீழ் இயங்கும், இளைஞர்அமைப்பு சமூக சிந்தனை கொண்டதாகவே இருக்கும் என்றும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.