கஜா நிவாரண நிதியாக ரூ.13.32 கோடி கிடைத்துள்ளது : அரசு அறிவிப்பு

--

சென்னை

ஜா புயல் நிவாரணத்துக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நேற்று வரை ரூ.13,32,67,288 ரூபாய் இதுவரை கிடைத்துள்ளது.

தமிழகத்தை கடும் பாதிப்புக்குள்ளாக்கிய கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக நிதி கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையில் அறிக்கை அளித்திருந்தார். அதை ஒட்டி அரசியல் கட்சிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள், பொது மக்கள் என பலதரப்பட்டவர்களும் நிவாரண நிதியை அளித்தனர். தமிழக அரசு இந்த நிதி குறித்து நேற்று ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தது.

அதில்,”நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கஜா புயல் வரலாறு காணாத பாதிபை உண்டாக்கி இருக்கிறது. நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு கடந்த 19.11.2018 அன்று முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பத்திரிகைகள் முலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் “கஜா” புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு முதல்வரிடம் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்.

v 19.11.2018 அன்று நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

v 20.11.2018 அன்று டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் 2 கோடி ரூபாய்க்கான காசோலை.

v சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர் என். காமகோடி 1 கோடி ரூபாய்க்கான வங்கி வரைவோலை.

v சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சி. துரைசாமி மற்றும் இயக்குநர் டி. சாந்தி ஆகியோர் 1 கோடி ரூபாய்க்கான காசோலை.

v 21.11.2018 அன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளையின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலை.

v லைக்கா நிறுவனத்தின் சார்பில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

v டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம் அவர்கள் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

v திரைப்பட நடிகர் அஜித் குமார் சார்பில் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

முதல்வரிடம் 23.11.2018 அன்று தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

v வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் 1 கோடி ரூபாய்க்கான காசோலை.

v எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர். பச்சமுத்து, எஸ்.ஆர்.எம். குழுமத்தின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலை.

v தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்கங்களின் தலைவரும், தரணி சுகர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் பழனி ஜி. பெரியசாமி, ஆரூரான் சர்க்கரை நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ராம் வி. தியாகராஜன், ஈ.ஐ.டி. பாரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் வி. ரவிச்சந்திரன், ஈரோடு-பொன்னி சர்க்கரை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என். இராமநாதன், சக்தி சர்க்கரை நிறுவனத்தின் இயக்குநர் எம். ஹரிஹர சுதன், ராஜஸ்ரீ சுகர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜி. சத்தியமூர்த்தி, தனலட்சுமி ஸ்ரீனிவாசன் சுகர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியோர் தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்கங்களின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலை.

v ராம்கோ குழும நிறுவனத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமா ராஜா மற்றும் தலைமை செயல் அலுவலர் ஏ.வி. தர்மகிருஷ்ணன் ஆகியோர் 1 கோடி ரூபாய்க்கான காசோலை.

v தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் தலைவர் லெஜண்ட் சரவணன் அவர்கள் 1 கோடி ரூபாய்க்கான காசோலை.

v சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா, மதுரை புறநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

v விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

v திரைப்பட நடிகர் விவேக் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

அத்துடன் 24.11.2018 அன்று ஜிஆர்டி குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர்கள் ஜி.ஆர். அனந்தபத்மநாபன் மற்றும் ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

இந்த தொகையுடன் பொதுமக்களும் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை வழங்கப்பட்ட தொகை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாயாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.