ரூ.14 ஆயிரம் கோடி: தமிழக சட்டப்பேரவையில் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்.!

சென்னை:  தமிழக சட்டப்பேரவையில் ரூ.14 ஆயிரம் கோடி அளவிலான  துணை பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின்  இறுதி நாளான இன்று பல்வேறு முக்கிய மசோதாக் கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவல், பொதுமுடக்கம் காரணமாக, தமிழகஅரசுக்கு  நிதிச்சிக்கல்  எழுந்துள்ளது.

இது தொடர்பாக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  ரூ.14 ஆயிரம் கோடிக்கு  துணைபட்ஜெட் தாக்கல் செய்தார்.

அதன்படி, கொரோனாவுக்காக தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு செய்துள்ளது. நிவாரண தொகைக்காக ரூ.4896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக ரூ.638.85 கோடியும், தனிமைப்படுத்துதலுக்காக ரூ.262.25 கோடியும் தமிழக அரசு செலவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.