மகாத்மா காந்தி 150ஆவது பிறந்த நாளுக்கு ரூ.150 கோடி ஒதுக்கிய மோடி அரசு

டில்லி

தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாஜகவின் கடைசி பட்ஜெட்டில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மோடி அரசு சரித்திர புகழ் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு பெரும் தொகை ஒதுக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.   கடந்த 2014ஆம் வருட நிதிநிலை அறிக்கையில் சர்தார் வல்லப்பாய் படேலுக்கு சிலை அமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.     அதன் பிறகு பெண் குழந்தைகள் நலத்திட்டத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்தது.

இந்த வருட நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தின கொண்ட்டாட்டத்துக்கு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்த விழாவை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  அந்தக் குழுவில் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள்,  அரசியல் அமைப்பின் பிரதிநிதிகள்,  காந்தியவாதிகள்,  அனைத்துத் துறையையும் சார்ந்த பிரமுகர்கள்  சேர்க்கப் படுவார்கள் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த 150ஆவது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு என்னென்ன நிகழ்வுகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப் படும் என்பது இன்னும் அறிவிக்கப் படவில்லை.