பெங்களூரு போலிசார் தற்போது தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர். காரணம், 5000 மக்களை ஏமாற்றி சுமார் 1500 கோடி ரூபாயை ஏய்த்த பலே ஆசாமி ஒருவனை பிடித்து வைத்திருந்தாலும், அவன் கம்பெனியின் நிர்வாக இயக்குநராக இல்லாததால் கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டு, திஷா சவுத்ரி எனும் பெண் நடத்திய டிரீம்ஸ் இன்ஃப்ரா இந்தியா மற்றும் குரு கல்யாண் ஆகிய ரிய எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் மந்தீப் கவுர் நடத்திய டி.ஜி.எஸ். ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், ₹ ஓரு லட்சம் முதல் 1.2 கோடிவரை முதலீடு செய்திருந்தனர்.

முதலீடு செய்த மக்களிடம் ஒரு காலி பிளாட்டை காண்பித்து விரைவில் கட்டிடம் கட்டத் துவங்கப் படும் என அறிவித்தனர். ஆனால், ஆறு மாதங்களாகியும் எந்தக் கட்டுமானப் பணியும் துவங்காததால் மக்கள் சந்தேகம் அடைந்து, பணத்தை திருப்பிக் கேட்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட காசோலை வங்கியில் பணமின்றி திரும்பிவந்தது,.
பல்வேறு மக்கலின் சுமார் 50 கோடி மதிப்பிலான காசோலைகள் திரும்பி வந்தன.
திஷா சவுதிரி என்பவள் சச்சின் நாயக்கின் முன்னாள் மனைவி. மண்தீப் கவுர் சந்திப்பின் மனைவி. திஷாவின் நிறுவனத்தில் 51% பங்குகளுக்குச் சச்சின் சொந்தக்காரன்.
பல வருடம் கழித்து இப்பொழுது போலிசார் இவனை மடக்கியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களின் தான் 13 குற்றவாளிகளைப் போலிசார் கைது செய்துள்ளனர்.

இதே பலே ஜோடி தான் கடந்த 2008 ஆண்டில், சுமந்த் குமார் தாஸ் மற்றும் ஈஷா சுமந்த் என்கிறப் பெயரில், மக்களை 10% மாதாந்திர வட்டி, முதலீடு செய்தால் மாதம் 5% வட்டியென “ஃப்ர்ன்டியர் குரூப்” பெயரில் முதலீட்டு முறைகேட்டில் ஈடுபட்ட தம்பதி என்றும் போலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

டெல்லியில், 30 லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட யோகேஸ் சவுத்ரி என்பவனும் இந்தச் சச்சின் தான் என காவல் அதிகார்கள் சந்தேகிக்கின்றனர்.

நன்றி: தி நியூஸ் மினுட்