குஜராத்: போதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.1,500 அபராதம்…நீதிமன்றம் உத்தரவு

காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இங்கு மது தொடர்பான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத கால சிறை அல்லது இந்த இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்நிலையில் அகமதாபாத்தை சேர்ந்தவர் ஜெய்மின் படேல். இவர் மீது கடந்த 2013ம் ஆண்டு குடித்துவிட்டு வாகனம் ஒட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 22வது மெட்ரோபாலிட்ட நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு வழக்கு விசாரணை நடந்து வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வ ந்தபோது குற்றத்தை ஜெய்மின் படேல் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார்.

குற்றத்தை ஒப்புக் கொண்டவருக்கு குறைந்தபட்சம் தண்டனை வழங்க வேண்டும் என்று 2005ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை மேற்கோள்காடடி இவருக்கு ரூ.1,500 அபராதமும், ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் உட்கார வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.