ர்டெல்  வங்கியில் வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமலே ரூ.167 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. அதையடுத்து அந்த வங்கியின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

அரசு பெட்ரோலிய நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆகியவை வாடிக்கையாளரின் பணத்தை ஏர்டெல் பேமண்ட் வங்கிக்கு மாற்றி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கியாக ஏர்டெல் நிறுவனத்தின்  பேமெணட்  வங்கி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ஏர்டெல் மொபைல் சிம் வாங்குபவர்கள் அதற்கு ஆதாரமாக ஆதார் எண்ணை சமர்ப்பிக்க கோரி வந்தது.  அதன்படி ஆதார் எண்ணை ஆவணமாக சமர்ப்பித்து ஏர்டெல் சிம் கார்டு வாங்கிய 31.21 லட்சம் வாடிக்கையாளர்கள் குறித்த தகவலை அவர்களின் அனுமதி பெறாமலே அவர்களின் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கின் வாயிலாகவே சிலிண்டர் மானியம் பெறும் வகையில், அதன் இணைப்பும் இணைக்கப்பட்டு சுமார்  167 கோடி ரூபாய் வரை  வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புகார் வந்ததை தொடர்ந்து, நடைபெற்ற அதிரடி சோதனை காரணமாக, வாடிக்கை யாளர்கள் அனுமதி பெறாமல் இந்த மோசடியைச் செய்ததற்காக ஏர்டெல் பேமெண்ட் வங்கியுடன் ஆதார் எண் இணைக்கப்படுவதற்கு ஆதார் ஆணையம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

இந்த வங்கிக்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ரூ.40 கோடியும், பாரத் பெட்ரோலி யம் கார்ப்பரேசன்  ரூ.39 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 88 கோடியும் பணம் மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு நிறுவனமான இந்த பெட்ரோலிய நிறுவனங்கள் எந்த முறையில் ஏர்டெல் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பணத்தை மாற்றியது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில்,  வாடிக்கையாளர்களின் பேமெண்ட் வங்கியில் வரவு வைக்கப்பட்ட பணத்தை அவர்களது வங்கிக்கணக்கிற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.