அடேங்கப்பா……! 19ஆயிரத்து 100கோடி சொத்து: முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர்….

 

சென்னை:

மிழகத்தில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி மாறன் இடம்பிடித்துள்ளார். இவர் சன் டிவி, சுமங்கலி கேபிள், தினகரன் பத்திரிகை  உள்பட ஏராளமான நிறுவனங்களையும், உலக நாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக கருதப்பட்ட மறைந்த முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன். இவர் தமிழகத்தில் 100 கோடிக்கும் மேலான சொத்துக்கள் வைத்திருப்பவர்களில் முதலிடத்தில் இருப்பதாக HURUN REPORT INDIA AND IIFL  என்ற ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டு உள்ளது. கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு ரூ.19ஆயிரத்து 100 கோடி (INR 19,100 crore) என்று பட்டியலிட்டு உள்ளது.  அதுபோல இந்திய அளவில் கலாநிதி மாறன் 43- வது இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

கருணாநிதி குடும்பத்தைச் சேர்நத் கலாநிதி மாறனின் அசூர வளர்ச்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹுருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் ஐஐஎஃப்எல் வெல்த் நாடு முழுவதும் பணக்கார தமிழர்கள் பற்றிய விரிவான பகுப்பாய்வை வெளியிட்டன.  அந்த பட்டியலின் படி முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி மாறன் முதலிடத்தில் இருக்கிறார்.

2வது  இடத்தில்  ZOHO secure நிறுவனத்தின் வெம்பு ராதா என்பவர்  9,900 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும்,

3வது இடத்தில் வெம்பு சேகர்  7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன்  உள்ளனர்.

4வது இடம் போத்தீஸ் நிறுவனத்தின் சடையாண்டி மூப்பனாருக்கு கிடைத்துள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ.  7,100 கோடி. இவர் இந்திய அளவில் 125 -வது இடத்தில் உள்ளார்.

5வது இடத்தில் அருண் ஐஸ்கிரிம், ஹட்சன் பால் நிறுவனமான  ஹாட்சன் அக்ரோ புரோடக்ட்ஸ்- ன் சந்திரமோகன் உள்ளார். இவரது சொத்து மதிப்பு  7 ஆயிரம் கோடி.

6வது இடத்தில் அழகுசாதனம் தயாரிப்பாளரான கவின்கேரின் CK ரங்கநாதன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 5,300 கோடி.  மேலும் பிரஷ்டீஸ் நிறுவனத்தின்  டி.டி.ரகுநாதன் உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவில் உள்ள  கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள 62 சதவிகிதம் பேரில், 4 பேர் சென்னையில் வசிப்பவர்கள் என்றும் இவர்களில் 12 பேர் கோவை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், 4 பேர் திருப்பூர், 3 பேரும் சேலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்டிலில் புதிதாக 7  கோடீஸ்வரிகள் உள்பட 18 பேர் புதியதாக இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள நிறுவனம், கடந்த ஆண்டை விட தமிழகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

ஹுருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் ஐஐஎஃப்எல் வெல்த்  நிறுவனங்கள் ஏற்கனவே கடந்த ஆண்டு (2019) செப்டம்பரில் இந்தியா பணக்கார பட்டியலை வெளியிட்டன. அப்போது,  இந்தியாவின் பணக்காரர்களின் மொத்த மதிப்பு 1,000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்புடையது. இது 2019 ஆம் ஆண்டில் 41 தொழில்களில் 953 நபர்களின் தரவுகளை சேகரித்தது.

தற்போது  எட்டாவது ஆண்டாக பணக்கார பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில்,  இந்தியர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து  முதலிடத்தில் உள்ளார்,அவரது சொத்தின் நிகர மதிப்பு 3,80,700 கோடி ரூபாய்.

தமிழகத்தில் உள்ள பணக்காரர்கள் குறித்து வெளியிட்டுள்ள  பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள  தமிழர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு   1,38,400 கோடி ரூபாயாக உள்ளது – இது 2018 இல் இருந்ததை விட மூன்று சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: dmk, Kalanithi Maran, karunanidhi, Maran brothers, richest man!, Rs 19.1k cr wealth: Karunanidhi family Kalanithi Maran No.1 richest man in Tamilnadu, suntv, tamilnadu, கருணாநிதி, கலாநிதி மாறன், சன்டிவி, திமுக, பணக்கார குடும்பம், மாறன் பிரதர்ஸ்
-=-