ரூ.2.25 லட்சம் கோடி செலவில் ரூ.13000 கோடி மதிப்பிழப்பு : ப சிதம்பரம் வருத்தம்

டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் ரூ. 2.25 லட்சம் கோடி செலவில் ரூ.13000 கோடி மதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார்.

கடந்த 2016 ஆம் வருடம் பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்புழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பணம் முழுவதுமாக மதிப்பிழக்கும் எனவும் கள்ள நோட்டுக்கள் முழுவதுமாக ஒழிந்து விடும் எனவும் பாஜகவினரால்  கூறப்பட்டது.    ஆயினும் புதிய ரூபாய் நோட்டுக்களிலும் கள்ளநோட்டுக்கள்  புழக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி மொத்தம் புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களில் ரூ. 10720 கோடி மதிப்பிலான நோட்டுக்கள் மட்டுமே வங்கிகளுக்கு வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.   இது நாடெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப சிதம்பரம் தனது டிவிட்டரில் பந்திந்துள்ளார்.

அவர் அந்த பதிவில், “பண மதிப்பிழப்பு  நடவடிக்கைக்கு பின் மக்களால்  வங்கிகளில் டிபாசிட் செய்த பணத்தின் அளவைப் பார்க்கையில் அது மிகவும் குறைவானதாகவே உள்ளது.   இதுவரை திரும்ப வராத நோட்டுக்கள் மற்றும் கள்ள நோட்டுக்களின் மதிப்பு சுமார் ரூ. 13000 கோடி மட்டுமே ஆகும்.    இந்த ரூ. 13000 கோடியை மதிப்பிழப்பு செய்ய மோடி அரசு மிகவும் செலவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் 1.5% வளர்ச்சியை இழந்துள்ளது.   இது மட்டுமே ரூ.2.25 லட்சம் கோடி ஆகும்.  இது தவிர பலர் தங்களின் தினசரி ஊதியமான ரூ.15 கோடியை இழந்துள்ளனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.   பல்லாயிரக்கணக்கான சிறுதொழில்கள் அழிந்து பல லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.” என வருத்தம் தெரிவித்துள்ளார்.