கொரோனா பாதித்த சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி… தமிழகஅரசு
சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்படும் சென்னை சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்க ளுக்கும் கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று தமிக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.