கேரளா வெள்ளத்தில் பலியானவர்களுக்கு ரூ. 2 லட்சம்…..மோடி அறிவிப்பு

திருவனந்தபுரம்:

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

வெள்ள பாதிப்பு குறித்து கேரள கவர்னர், முதல்வருடன் மோடி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், மோடி கூறுகையில், ‘‘கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும்.

மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’’ என்றார்.

புகைப்படம் உதவி ஏஎன்ஐ: நன்றி