கஜா புயல் நிவாரண நிதி : ஜோதிகாவின் பட டிக்கட்டில் தலா ரூ. 2 ஒதுக்கீடு

--

சென்னை

ஜா புயல் நிவாரண நிதிக்காக ஜோதிகா நடித்துல்ள காற்றின் மொழி திரைப்பட டிக்கட் தொகையில் தலா ரூ. 2 வழங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகம் எங்கும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களை கஜா புயல் வெகுவாக பாதித்துள்ளது. பல மக்கள் வீடு, சொத்துக்கள் உள்ளிட்டவைகளை இழந்து உணவுக்கும் குடி நீருக்கும் தவித்துவருகின்றனர். அரசு நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட போதிலும் மிகவும் மெதுவாக நடப்பதாக குறை கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகினர் புயல் நிவாரணத்துக்கு நிதி உதவிகள வழ்ங்கி வருகின்றனர். ரூ. 25 லட்சம் அளவுக்கு நிவாரண பொருட்கள் வழங்க உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். நடிகர் சிவ கார்த்திகேயன் ரூ. 10 லட்சம் முதல் அமைச்சரின் புயல் நிவாரண நிதிக்கு அலித்துள்ளார். அத்துடன் ரூ. 10 லட்சத்துக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

திரையுலகின் மூத்த குடும்பத்தில் ஒன்றான சிவகுமார் குடும்பத்தில் இருந்து ரூ. 50 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுளது. நடிகர் சூர்யா 20 லட்சம், கார்த்தி 15 லட்சம், ஜோதிகா 10 லட்சம் மற்றும் சிவகுமார் 5 லட்சம் என வழங்க உள்ளனர்.

இந்நிலையில் ஜோதிகா நடித்து ஓடிக்கொண்டிருக்கும் காற்றின் மொழி படக்குழுவினர், “காற்றின் மொழி திரைப்படத்தை தமிழக மக்கள் சிறந்த குடும்பப் படமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு நன்றி. தமிழக டெல்டா பகுதிகளில் கஜா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இன்று முதல் தமிழகம் எங்கும் விற்பனையாகும் இந்த படத்தில் ஒவ்வொரு டிக்கட்டில் இருந்தும் ரூ. 2 வீதம் தமிழக அரசின் கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்” என அறிவித்துள்ளனர்.