ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி…முதல்வர் அறிவிப்பு

சென்னை:

பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் ராணுவவீரர் மூர்த்தி.

அப்பகுதியில் ஏற்பட்ட பனி புயலில் சிக்கி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.