உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்…முதல்வர் அறிவிப்பு

கன்னியாகுமரி:

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்து ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசுகையில், ‘‘ ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.20 லட்சம் வழங்கப்படும்.

மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதிக் கேற்ப அரசு பணி வழங்கப்படும். புயலால் சேதமடைந்த படகுகளுக்க உரிய நிவாரணம் வழங்கப்படும். ஒகி புயலால் காணாமல் போன கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் பணி தொடரும்’’ என்றார்.