சென்னை:

காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

காஷ்மீர் புல்வாமா பகுதியில், நேற்று மாலை  2500க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் 78 வாகனங்களில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது,  ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்துடன் வேகமாகவந்து, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களில் மீது மோடி வெடிக்கச்செய்தான். இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 44வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோரத்தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் பலியாகி உள்ளனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சிவச்சந்திரன் என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  உயிரிழந்த தமிழக வீரர்களான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மற்றும்அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாய் நாட்டிற்காக வீரமரணம் எய்திய இவர்களது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.20 லட்சம் வழங்கப்படும்’.

இவ்வாறு கூறி உள்ளார்.