ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 டிப்ஸ்… தமிழகஅரசு

சென்னை:

ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு  ரூ.200 செலவின தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்துக்காக அரசு அறிவித்துள்ள சலுகைகள், உணவுப்பொருட்களை வழங்கும் வகையில் தமிழகத்தில் ரேசன் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக பல  ரேஷன் கடை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில்,  தமிழக அரசு இன்று புதிய அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின கையாக நாளொன்றுக்கு ரூ.200வழங்கப்படும்.

இதனால் 34,000 ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் .

இவ்வாறு தெரிவித்து உள்ளது.