சென்னை:

ழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும், தமிழக அரசின் அரசணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

நாடாளுமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று உத்தரவிட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக தொடரப்பட்ட 2 வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும், கருணாநிதி என்ற மனுதாரர் வழக்கு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கு ஏதுவாக அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி யிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் நடைபெற்று வந்தது. கடந்த விசாரணையின்போது, வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அரசாணை தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாதம், பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தீர்ப்பில், ரூ.2 ஆயிரம் திட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா அல்லது தடை விதிக்கப்படுமா என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு எற்பட்டு உள்ளது.