தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறையில் ரூ.2000 கோடி ஊழல்? அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை:

கிராமப்பகுதிகளுக்கு பைபர் ஆப்டிக் மூலம் இணைதறளம் செயல்படுத்துவம் வகையில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறையில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூறி உள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக் மூலம் இணையதளம் செயல்படுத்தும் ரூ 2000 கோடி தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை டெண்டரில் செட்டிங் மற்றும் ஊழல் அரங்கேற்றுவதற்கான வேலைகள் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்த டெண்டர்களில் செட்டிங் செய்ய மிகப்பெரிய மாற்றங்கள் அரங்கேறியுள்ளது குறித்து அறப்போர் இயக்கம் முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் மத்திய அரசின் தொலை தொடர்பு செயலாளர், மத்திய விஜிலன்ஸ் கமிஷன் மற்றும் காம்படிஷன் கமிஷனிடம் ஏற்கனவே 19/04/2020 தேதியிட்ட புகார் அளித்திருந்ததகவும், அதற்கு   அமைச்சர் உதயகுமார் அவர்கள் எந்த முறைகேடும் நடை பெறவில்லை என்றும் டெண்டர் செயல்படுத்த மத்திய அரசு காலம் சுருக்கியதே மாற்றங்களுக்கு காரணம் என்று கூறி இருந்தார்.

ஆனால், தற்போதைய டெண்டரில் ரூ.2ஆயிரம் கோடி அளவில்   நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறி உள்ளது.

This slideshow requires JavaScript.