மாதம் ரூ.2ஆயிரம்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதி: சட்டமன்றத்தில் எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை:

றுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக மாதம் ரூ. 2000  வழங்கப்படும்  என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி 110ன் கீழ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ம்மா வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடக்கும் அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப் பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும்,

குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள்,  நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள்,  கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள்,  உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர் கள், துப்புரவுத் தொழிலாளர்கள்,  மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர்.

இதற்கென 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்,  2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி அன்று தமிழக அரசின் கடன் 3.97 லட்சம் கோடி இருக்கும் கணிக்கப்பட்டுள்ள நிலையில்,  எடப்பாடியின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1000₹ என வழங்கிய தால், 2100 கோடி செலவிடப்பட்டு உள்ள நிலையில்,  தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்க ளுக்கு தலா 2000₹ என 1200 கோடியை அரசு செலவிட இருப்பதாக அறிவித்து உள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே இதுபோன்ற கவர்சிகரமான அறிவிப்புகளை தமிழக அதிமுக  அரசு வெளியிட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.