சென்னை:

றுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த ரூ2000-வழங்கும் திட்டம், அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ந்தேதி  அன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110ன் கீழ் கடந்த பிப்ரவரி 11ந்தேதி சட்டமன்றத்தில் முதல்வர் எடப்படி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, இந்த திட்டம் வரும்  24ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை  தொடங்கி வைக்கிறார்.‘

அதைத்தொடர்ந்து, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் பேரின் வங்கிக் கணக்கில் இந்த ரூ.2000 சிறப்பு நிதி நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் இந்த சிறப்பு நிதி திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.