டில்லி,

100நாள் வேலை திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக மத்திய அமைச்சர் கூறி உள்ளார்.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கடந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்தது.

இந்த நூறு நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 2012-2013-ம் நிதிஆண்டு பட்ஜெட்டில் ரூ.38 ஆயிரம் கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, கடந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.58 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த திட்டத்தின்படி பயன்பெறும்  பயனாளிகளுக்கு உரிய சம்பளம் 15 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.